இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்த கனமழை: மின்னல் தாக்கி 21 ஆடுகள் பரிதாப பலி..!!
Author: Aarthi Sivakumar12 August 2021, 4:33 pm
மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே நேற்று இரவு பெய்த கன மழையில் மின்னல் தாக்கி 21 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் உள்ள கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா என்பவரின் மகன் மாரிசாமி . இவருக்கு சொந்தமாக 16 ஆடுகள் உள்ளன.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் செல்வம் என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் என மொத்தம் 21 ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு இருவரும் மாடுகளை மேய்க்கச் சென்று விட்டனர். மாடுகளை மேய்த்துவிட்டு, இடியுடன் கனமழை பெய்த காரணத்தினால் பட்டிக்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, மழை நின்ற பிறகு இருவரும் ஆடுகளை பார்க்க பட்டிக்கு சென்றுள்ளனர். இடி மின்னலுடன் பெய்த கன மழையில் மின்னல் தாக்கி 21 ஆடுகளும் பரிதாபமாக இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0