கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

9 April 2021, 1:52 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மீன் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஓட்டுனர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் காவல்பட்டி கிராமத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் கட்டிகளை ஏற்றிச்சென்ற மீன் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்ததில் லாரியில் இருந்த பழவேற்காடு கரையார் தெரு அப்துல் சமது என்பவரின் மகன் முகமதுஅக்ரம்( 26)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் பலத்த காயத்துடன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கி முகமது அக்ரம்( 26) உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 18

0

0