தல்லாகுளம் தலைமை தபால் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

By: Udayaraman
1 October 2020, 5:14 pm
Quick Share

மதுரை: வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தல்லாகுளம் தலைமை தபால் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக பல்வேறு தரப்பு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலைய வாயிலில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020,வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம்,வேளாண் சேவைகள் திருத்த சட்டம்,ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 39

0

0