கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ரம்ஜான் பண்டிகை : வீடுகளில் தொழுகை.. பித்ரா கொடுத்து கொண்டாட்டம்..!!

14 May 2021, 10:11 am
ramzan - updatenews360
Quick Share

மதுரை : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடித்து இஸ்லாமியர்கள் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் அடிப்படை கடமைகளில் 3வது கடமையான ரமலான் மாதம் உண்ணா நோன்பினை 30 நாட்கள் கடைபிடித்த இஸ்லாமியர்கள், நேற்று ஷவ்வால் மாத பிறை தென்பட்டதை தொடர்ந்து, ரமலான் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொரோனா ஊரடங்கு எதிரொலியாக இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்திக்கொள்ள தலைமை ஹாஜி வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்று இன்று அதிகாலையில் எழுந்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும், ஏழை எளியோருக்கு பித்ரா என்னும் உதவிகளை வழங்கிய பின்னர், புத்தாடைகளை அணிந்து அவரவர் வீடுகள் மற்றும் மாடிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையின் போது அரசு அறிவுரையை பின்பற்றி போதிய சமுக இடைவெளியுடனும், முக கவசங்களை அணிந்தும், கைகளை சோப்பால் கழுவியபின் தொழுகையில் ஈடுபட்டனர்.

வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தொழுது முடித்து ஒருவொருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துகொண்டனர். ஆனையூர், மஹபுப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு திருமங்கலம் , சிலைமான், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

Views: - 62

0

0