குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி: தென்னிந்தியாவில் முதல் முறையாக நடந்தது

Author: Udhayakumar Raman
20 September 2021, 11:56 pm
Quick Share

கன்னியாகுமரி: தென்னிந்தியாவில் முதல் முறையாக குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று மகா சமுத்திர தீர்த்தம் ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா ஆஸ்ரமம் வெள்ளிமலை ஸ்ரீ சைதன்யானந்த சுவாமி ஜி தலைமை வகித்தார் .நிகழ்ச்சியையொட்டி இன்று மாலை 5 மணிக்கு பக்தர்கள் முக்கடல் சங்கமம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் கூடினர்.பின்னர் பஞ்ச சங்கநாதம் மூன்று முறை முழங்கப்பட்டது. தொடர்ந்து மாதா பிதா குரு ஆசி வேண்டல் , மாலை 5 30 க்கு குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல், பக்தர்கள் பிள்ளையார் கோவில் சென்று அடியார்கள் வேண்டுதல் பூஜை நடந்தது.தொடர்ந்து அணையா தீபம் ஏற்றுவது,

கயிலை வாத்தியம் இசைத்தல், ஏழு சப்த கன்னிகள் பூஜை செய்து கோவிலில் இருந்து வரும் அடியார்களுக்கு எதிர்சேவை செய்தல் நடைபெற்றது.27 சுமங்கலிகள் தீபத்துடன் நெய் தீபம் ஏற்றினர் .ஸ்ரீ உமாமகேஸ்வரர் சிவாச்சாரியார் சங்கல்ப பூஜை நடந்தது .இதனையடுத்து சமுத்திர அபிஷேகம் அலங்காரம் நைவேத்தியம் செய்தல் செய்தலும் இறுதியாக குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 281

0

0