மகாலட்சுமி கோவில் திருவிழா:தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Author: Udhayakumar Raman
16 October 2021, 10:57 pm
Quick Share

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே மகாலட்சுமி கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பண்ணை பட்டியில் அருள்மிகு மகாலட்சுமி தாயார் திருக்கோயில் உள்ளது ஒவ்வொரு ஆண்டும் கடைசி புரட்டாசி சனிக்கிழமை அன்று மகா உற்சவ திருவிழா நடைபெறும். இதற்காக பக்தர்கள் காப்பு கட்டி ஒரு மாத காலம் விரதம் இருந்து திருவிழா கொண்டாடுவார்கள்.திருவிழாவையட்டி திருப்பூர், தாராபுரம், கோவை, ஒட்டன்சத்திரம், பழனி ,கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தலையில் தேங்காய் உடைக்கும் பக்தர்களை பரவசமூட்டும் விதமாக தோல் கருவிகளை இசைத்து வீர முஷ்டி நடனம் ஆடி பரவசம் மூட்டினர் .பின்பு கோவில் பூசாரி ஒவ்வொருவரின் தலையில் தேங்காய் உடைக்க கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் எழுப்பப்பட்டது தேங்காய் உடைக்கும் சமயத்தில் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர் நோய்வாய்ப்பட்டவர்கள் சுகம் அடைவதற்காகவும் குழந்தைப்பேறு பெறுவதற்காகவும் நேத்திக்கடன் நிறைவேறியவர்களும் நேத்திக்கடன் வேண்டிக்கொண்டு அவர்களும் தலையில் தேங்காய் உடைத்து நிவர்த்தி கடன் செலுத்தியதாக தெரிவித்தனர்.

Views: - 130

0

0