தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வலியுறுத்திய மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றம்

Author: kavin kumar
10 August 2021, 6:28 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கொரோனா பெரும் தொற்றுநோயை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும்மென வலியுறுத்தி வீடு, வீடாக சென்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பெரும் தொற்றுநோயை முற்றிலும் தடுக்க 333 கிராம ஊராட்சிகளிலும் 100 சதவிதம் தடுப்பூசிகள் போட்டு க்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 100 சதவிதம் கொரோனா தடுப்பூசி போடும் வகையில் மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்துடன், நேரு யுவகேந்திரா மற்றும் திப்பனப்பள்ளி ஊராட்சியும் இணைந்து கொரோனா தடுப்பூசி போடும் முகமினை நடத்தியது.

இதன் முன்னதாக 100 சதவிதம் கொரோனா தொற்று இல்லாத ஊராட்சியாக திகழ்ந்திட 100 சதவிதம் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்கள் கட்டாயம் போட்டுக் கொள்ள வழியுறுத்தி கும்மனூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மகாத்மாகாந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வீடு, வீடாக தண்டோரா அடித்து அனைவரும் தடுப்பூசிப் போட்டிக்கொள்ள வழியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைப்பெற்ற தடுப்பூசிப்போடும் முகாமினை திப்பனப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் மற்றும் மகாத்மாகாந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த கொரோனா விழிப்புணர்வு தடுப்பூசி முகாமில் கிராம மக்கள் மட்டுமின்றி மகத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கிழ் பணிபுரியும் பணியாளர்களும் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்கள். இந்த சிறப்பு முகாமின் போது நுகர்வோர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜாய், மருத்துவர் மணிவர்மன், கிராம செவிலியர் ஜெயசுதா, மேற்பார்வையாளர் நிர்மலா சுகாதார ஆய்வாளர் கலைவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Views: - 209

0

0