பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

10 July 2021, 3:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுதேசி மில் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 302

0

0