மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு : குதூகளிப்பில் கமல்ஹாசன்..!!

15 January 2021, 7:09 pm
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவிருக்கும் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திற்கு, மாநில கட்சி அந்தஸ்து பெறாததால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நின்ற அக்கட்சியின் டார்ச் லைட் சின்னம், இந்த முறை கிடைக்கவில்லை.

அந்த சின்னத்தை பெற்ற கட்சியும், தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் தேவையில்லை எனக் கூறிவிட்டது. இதனால், மீண்டும், டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கமல்ஹாசன் தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர்கிங் பிறந்த நாளில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி, ஒளி பரவட்டும் என, அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையோடு, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பையும் மக்கள் நீதி மய்யத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 0

0

0