குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தைமீட்பு

Author: Udhayakumar Raman
29 July 2021, 2:29 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தொப்புள் கொடியுடன் குப்பையில் ஆண் குழந்தையை மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பிறந்த சிலமணி நேரத்திலேயே தொப்புள் கொடி கூட அறுபடாமல் உயிருடன் குப்பையில் ஆண் குழந்தை உள்ளதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர்குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும். காவல்துறையினர் உயிரோடு குழந்தையை குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்ற நபர் யார்? தவறா நடக்கையில் பிறந்த குழந்தை என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 109

0

0