விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

5 November 2020, 8:55 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பிரவீன் குமார் (வயது 21) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து இவர் காணவில்லை என பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இன்று மதனாஞ்சேரி முருகன் வட்டம் என்ற பகுதியில் தனபால் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்ற வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி சடலத்தை மீட்டனர். சடலமாக கிடந்தது பிரவீன்குமார் என அவரது பெற்றோர் உறுதிசெய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து பிரவீன் குமார் கிணற்றில் குதித்து தற்கொலை? செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 19

0

0