சாலையோரம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்

26 February 2021, 9:28 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இறந்த நபரின் உடலில் காயங்களுடனும் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையிலும்,

கண்டு எடுக்கப்பட்டதால் யாரேனும் கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு வீசி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் முழுவதும் அழுகிய நிலையில் உள்ளதால் இறந்த நபர் யார் என அடையாளம் கண்டறிவதல் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு செய்து அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 4

0

0