வீட்டில் குளிக்கும் பெண்களை செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது

Author: kavin kumar
23 September 2021, 4:29 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே வீட்டில் குளிக்கும் பெண்களை செல்போனில் வீடியோ எடுத்த நபர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அடம்ஸ். இவனுக்கு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ள நிலையில், இவன் வீட்டின் அருகே உள்ள வீட்டின் ஒன்றில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுக்கும் போது திடீரென செல்போன் ஒலித்ததால் சுதாரித்துக் கொண்ட அப்பெண் கூச்சலிடவே அங்கிருந்து தப்பிச் சென்ற அடம்ஸ் தலைமறைவனார். இச்சம்பவம் குறித்து அப்பெண் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விருதம்பட்டு போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அடம்ஸ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 587

0

0