இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபர் கைது

11 October 2020, 10:24 pm
Quick Share

வேலூர்: காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபரை கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரேம் நவாஸ். இவர் அவரது நண்பர் யோகராஜ் என்பவரிடம் ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு எடுத்து சென்று நாளை தருவதாக கூறி எடுத்து சென்று வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதாக அவர்கள் வீட்டிற்கு கீழ் வீட்டில் வசிப்பவர்கள் கூறியதால் இரவில் வெளியே வந்து பார்த்த போது அந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது அணைக்க முயற்சித்தும் தீமளமளவென பரவி தீயில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காட்பாடி காவல்நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை தீவைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்து அங்குள்ள வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்த போது பக்கத்து தெருவை சேர்ந்த அஜீத் என்பவர் அந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட் ரோலை துணியில் நிணைத்து வண்டியை கொளுத்தி போட்டதை கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் அஜீத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 31

0

0