கள்ளச்சாராயம் காய்ச்ச 2500 கிலோ வெல்லம் கடத்திய நபர் கைது
26 January 2021, 10:31 pmகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச 2500 கிலோ வெல்லம் கடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குடியரசு தினத்தை முன்னிட்டு தனிப்படைகள் அமைத்து ஆங்காங்கே மதுவிலக்கு சோதனை செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன் படி திருக்கோவிலுார் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி தலைமையில், உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் காவலர்கள் சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 50 சாக்கு மூட்டைகளில் 2500 கிலோ வெல்லம் மற்றும் இரண்டு லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மகேந்திரா பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்த சேராப்பட்டு சந்தோஷ் என்பவரை கைது செய்து வெல்லம், சாராயம் மற்றும் மகேந்திரா வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
0
0