போலீஸ் உடையில் அக்காவை மிரட்டியவர் கைது

13 April 2021, 4:35 pm
Quick Share

திருச்சி: துறையூர் அருகே போலீசார் உடையில் சென்று அக்காவை மிரட்டி சொத்துப் பத்திரம் கேட்டவரை கிராம பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

துறையூர் அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள செல்வராஜ்- வெண்ணிலா தம்பதி வசிக்கின்றனர். வெண்ணிலாவின் தம்பி பெரம்பலூர் சுமங்கலி நகரைச் சேர்ந்த சஞ்சீவி மகன் ராமஜெயம்(42). ராமஜெயம் தன் தந்தை மறைவுக்கு பிறகு அவர் பெயரில் இருந்த வீட்டு பத்திரம், பட்டா ஆகியவற்றை தன் அக்காவிடம் கேட்டு வந்தாராம். அவர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமஜெயம் பெரம்பலூரில் உள்ள நாடக கம்பெனியில் இன்ஸ்பெக்டர் உடை வாடகைக்கு எடுத்துள்ளார். இதனையடுத்து நேற்று அவர் இன்ஸ்பெக்டர் உடையில் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு வாடகை வந்து வெங்கடாசலபுரத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றார்.

அக்காவை அழைத்து தன்னை காவல் அதிகாரி என்று கூறி தன் வீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். உடனே அவரை தனது தம்பி என்று அடையாளம் தெரிந்து கொண்ட வெண்ணிலா ஆவணங்களைத் தர மறுத்துள்ளார். தொடர்ந்து ஆவணங்களை மிரட்டி கேட்டதால் அக்கம்பக்கம் இருந்தவர்களும் சூழ்ந்து கொண்டனர். கிராம பொதுமக்கள் ஒன்று கூடி சுற்றிவளைத்து அவரை பிடித்து உப்பிலியபுரம் காவல் நிலைய தகவல் அளித்தனர் . உப்பியியபுரம் போலீசார் ராமஜெயத்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் .

Views: - 43

0

0