17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

29 January 2021, 6:43 pm
Quick Share

அரியலூர்: 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அரியலூர் மாவட்டம் கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் தினக்கூலி தொழிலாளி நேரு. இவர் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 17 வயதாகும் ஐடிஐ படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியுடன் அடிக்கடி பேசிபழகி வந்துள்ளார். மேலும் அப்பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்து தனது பழக்கத்தை அதிகரித்து தனிமையில் சந்தித்து உடலுறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22.10.2018 ஆம் ஆண்டு திருமணம் செய்வதாக கூறி திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு லாட்ஜில் இருவரும் தனிமையில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து மகளிர் காவல்நிலையத்தில் இருவரும் ஆஜராகியுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதீபதி 17 வயது பெண் என்பதால் லிங்கதடிமேடு காப்பகத்தில் தங்க உத்தரவிட்டதோடு, நேருவை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு 29 ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தபோது நீதீபதி சத்யசாரா ஏககாலத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபாரதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து நேருவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.

Views: - 15

0

0