100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்கிய அமைச்சர்கள்

3 July 2021, 6:31 pm
Quick Share

திருச்சி: லால்குடி வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ராசாயன உரங்களை விவசாயிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் ராசாயன உரங்கள் வழங்கும் விழா எல். அபிஷேகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்றது. குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான 2 ஏக்கருக்கு ரூ. 2, 185 மதிப்புள்ள யூரியா 90 கிலோ, டிஏபி 50 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ ஆகிய ராசாயண உரங்கள் முழு மானியத்தில் வேளாண்மைத்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரங்களை நகர் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து லால்குடி வட்டாரத்தில் ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரத்து185 வீதம் 5,200 ஏக்கருக்கு ரூ. 1 கோடியே 13 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கவுள்ளனர்.

விழாவில் லால்குடி எம்எல்ஏ அ. சௌந்தரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ம. முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை ) சு. சாந்தி, வேளாண்மைத்துணை இயக்குநர்கள் (மாநிலத்திட்டம் ) வெ. லட்சுமணசுவாமி, சு. மல்லிகா (மத்திய திட்டம்) லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். ஜெயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 85

0

0