அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி வேட்பு மனுத்தாக்கல்

Author: Udhayakumar Raman
15 March 2021, 6:23 pm
Quick Share

திருச்சி: மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மு. பரஞ்ஜோதி் தனது வேட்புமனுவை மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராமன் அவர்களிடம் தாக்கல் செய்தார்.முன்னதாக மண்ணச்சநல்லூர் எம்ஜிஆர் சிலையிலிருந்து அதிமுக, பாமக, பாஜக ,தமாக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள்,

தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்த அவர், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமன் அவர்களிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், வேட்பாளர் மு.பரஞ்ஜோதியுடன் தமாக வடக்கு மாவட்ட தலைவர் கே.வீ. ரவீந்திரன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ், பிஜேபி விவசாய அணித் தலைவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Views: - 51

0

0