வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் போராட்டம்

26 January 2021, 3:09 pm
Quick Share

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 10க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களுடன் திருச்சி – நெ.1 டோல்கேட் ரவுண்டானாவில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ( பொறுப்பு) செந்தில்குமார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் வரையில் எங்கள் போராட்டம் தொடருமென கூறி சாலை மறியல் போராட்டத்தினை கைவிட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வாகனங்களும் திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலம் வழியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை நோக்கி பேரணியாக சென்றனர்.

இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யகண்ணு உள்ளிட்ட 30 விவசாயிகள் மீது கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

Views: - 5

0

0