அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை:ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 4320 மதுபாட்டில்கள் பறிமுதல்…

21 July 2021, 4:31 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்யப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 4320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருங்களூர் பகுதியில் சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் உதவி ஆய்வாளர் குமரேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசீலன், காவலர்கள் குரு,ராஜேஷ், ராஜேந்திரன் மற்றும் வில்பிரட் ஆகிய கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தெற்கு இருங்களூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 90 அட்டைப் பெட்டிகளில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 4320 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.போலீசார் வருவதை அறிந்த லாரன்ஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் தப்பியோடிய லாரன்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 126

0

0