4வது முறையாக திமுக வெற்றி பெற்றால் லால்குடி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: கே.என்.நேரு வாக்குறுதி

Author: Udhayakumar Raman
30 March 2021, 9:38 pm
Quick Share

திருச்சி: லால்குடி தொகுதியில் 4வது முறையாக திமுக வெற்றி பெற்றால் லால்குடி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வாக்குறுதி அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் 4 வது முறையாக போட்டியிடும் வேட்பாளர் அ. செளந்திரபாண்டியனை ஆதரித்து வாளாடி ஊராட்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- லால்குடி தொகுதி யில் போட்டியிடும் வேட்பாளர் செளந்திரபாண்டியனை 4 வது முறையாக வெற்றிப் பெற செய்தீர்கள் என்றால் லால்குடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் தொழிற்சாலைகள் பெருகும், வேலை வாய்ப்பு உருவாகும்.

நான் திருச்சி தொகுதியிலே போட்டியிட்டாலும், லால்குடி தொகுதி மக்களால் எம்எல்ஏ வாக, அமைச்சராக, திமுக முதன்மைச் செயலாளராக உயர்துள்ளேன். நான் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், லால்குடி தொகுதி மக்களாகிய உங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன் எனப் பேசினார். இதனைத் தொடர்ந்து லால்குடி, பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் செளந்திரபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

Views: - 82

0

0