கடை முன் தூங்கிய தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை

Author: Udhayakumar Raman
3 August 2021, 6:58 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மர அறுக்கும் தொழிலாளியை மர்ம நபர்கள் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணக்கால் ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சு , இளஞ்சியம் தம்பதியின் மகன் காட்டான்சுரேஷ். இவர் மர அறுக்கும் வேலை மற்றும் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். கூலி தொழில் செய்யும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தவர் சாலையோர கடைகளில் படுத்து உறங்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மர்ம நபர்கள் காட்டான்சுரேஷ் தலையில் கட்டையால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்தில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர்.பின்னர் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஸ்பார்க் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.மோப்பநாய் ஸ்பார்க் காமராஜபுரம் பகுதியில் சுற்றி வந்தது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.இந்த கொலை மதுபோதையில் நடந்ததா அல்லது வீட்டின் சொத்துப் பிரச்னைக்காக நடந்ததா என்ற கோணத்தில் லால்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 120

0

0