கருணாநிதியின் நினைவை முன்னிட்டு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டம்

Author: kavin kumar
29 August 2021, 1:58 pm
Quick Share

திருச்சி: மண்ணச்சநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை முன்னிட்டு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை முன்னிட்டு 5 கிலோ மீட்டர் தூரம் பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என்.நேரு மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கடைவீதி, துறையூர் ரோடு, வட்டாட்சியர் அலுவலகம், புதிய புறவழிச்சாலை வழியாக வந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள ்பல்வேறு கிராமங்களில் உள்ளவர்கள. மட்டுமல்லாது திருச்சி, அரியலூர், கரூர், பெம்பலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 1500 க்கும் மேற்பட்டோர பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலாவது பரிசு ரூ.10 ஆயிரத்தை மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியைச் சேர்ந்த பிரகாஷ், 2 வது பரிசு ரூ. 8 ஆயிரத்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெங்கராஜ், 3 வது பரிசு ரூ.5 ஆயிரத்தை மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார்கோயிலைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோருக்கு
பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் வழங்கினார். இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் யூனியன் சேர்மேன் ஸ்ரீதர், துணை சேர்மேன் செந்தில் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Views: - 166

0

0