இந்தியாவிலேயே அரசு சார்பில் இருங்களூர் ஊராட்சியில் அதிக மரக்கன்றுகளை நடும் விழா

1 January 2021, 5:50 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் அருகே 14 ஏக்கர் பரப்பளவில் 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை சிறப்பாக நடத்திய இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட்யை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிவராசு நினைவு பரிசு வழங்கினார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரி 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரிக்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய மியாவாக்கி அடர்வன காடுகள் உருவாக்கும் திட்டத்தில் ஒரே இடத்தில் 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா திருச்சி மாவட்ட மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைப்பெற்றது. சுத்தமான காற்றை சுவாசிக்கவும்,காட்டின் சூழலில் பொதுமக்கள் நடைப்பயற்சி மேற்கொள்ளவும்,

காற்று மாசுபாடு குறைத்து இயற்கை சூழலை மீட்டெடுக்கவும் மிகப்பெரிய மியாவாக்கி அடர்வன காடுகள் உருவாக்கும் திட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க உள்ளனர். லால்குடி வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன் மியாவாக்கி அடர் வனக்காடுகள் உருவாக்கும் முயற்சியில் லால்குடி, கல்லக்குடி, சமயபுரம், பூனாம்பாளையம் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று இருங்களூர் ஊராட்சியில் 1.50 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. வரும் 15 நாட்களில் அனைத்து மரக்கன்றுகளை நடும் பணி முடிவடைகிறது. மரக்கன்றுகளை நடும் பணியை சிறப்பாக நடத்திய இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட்யை பாராட்டி திருச்சி மாவட்டம் ஆட்சியர் சிவராசு நினைவு பரிசு வழங்கினார்.

Views: - 35

0

0