லாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…

Author: Udayaraman
27 July 2021, 8:31 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி வந்த இருவரை கொள்ளிடம் போலீசார் கைது செய்து மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி வருவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் போலீசார் வாகன சோதனை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எய்ச்சர் லாரியில் 2 யூனிட் மணலை தார்பாய் போட்டு மூடி வந்த லாரியை பிடித்து விசாரணை செய்தனர் போலீஸார். அப்போது திருட்டு மணல் கடத்தி வந்த திருச்சி அல்லித்துறை, மேலப்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் மகன் அற்புதம்(22)

மற்றும் திருச்சி வண்ணாரப்பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்த நாகபூபதி மகன் அர்ஜுன்(18) திருச்சி தேசிய கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் ஆகிய இருவரும் மணல் கடத்தியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கொள்ளிடம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மணல் திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.பின்னர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Views: - 142

0

0