விரைவில் அனைத்து பேரூராட்சி பகுதியில் அரசு நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும்: பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தகவல்

13 January 2021, 7:31 pm
Quick Share

திருச்சி: திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படுமென திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெகதீசன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லாப் பொங்கல் விழா பேரூராட்சி செயல் அலுவலர் நளாயின தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மண்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெகதீசன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கள் சிறப்பு தொகுப்பு பைகளை வழங்கினார்கள்.

அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை கௌவிக்கும் வகையில் இந்த பொங்கல் சிறப்பு பொருட்களை வழங்கினோம். லால்குடி வருவாய் கோட்டாட்சியர் முயற்சியில் லால்குடி, கல்லக்குடி, ச. கண்ணனூர் ஆகிய பகுதிகளில் லட்சகணக்கான மரக்கன்றுகளை நடும் பணி நடைபெற்றுள்ளது. அதே போல திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு இடங்களை திருச்சி மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு அறியப்பட்டு விரைவில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

Views: - 6

0

0