மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா.! முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்- எஸ்பி நேரில் ஆய்வு

27 February 2021, 7:18 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அரவிந்த் , மற்றும் மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் ஆகியோர் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி கொடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா நாளை 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் ,திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு, தங்கும் விடுதிகள் , அடிப்படை வசதிகள் , சாலைகள் செப்பனிடப்பட்டு தயார் படுத்தப்பட்டு இருப்பதையும் ,பக்தர்கள் வந்து செல்ல போதுமான பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, திருவிழா காலத்தில் பக்தர்கள் கடலில் நீராடும் போது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும்,

அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதை இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் எஸ்.பி பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதேபோல் திருவிழாவை காண வரும் பொது மக்களுக்கு ஏதேனும் தேவைகள் இடையூறுகள் இருந்தால் அவற்றை மாவட்ட நிர்வாகத்திற்கும், உயர் அலுவலர்களும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Views: - 2

0

0