ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் – பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி!

8 November 2020, 4:26 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல்லில் ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஒகேனக்கல் சுற்றுலா தலம் மூடப்பட்டது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பல்வேறு தளர்வுகளுடன் செயல்பட்டு வருவதை, தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாட, தமிழகம், கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஞாயிற்று கிழமை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை களை கட்டியதால், மெயனருவி, சினியருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. மேலும் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் சமைத்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் 7 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகையால், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வெறிச்சோடி இருந்த ஒகேனக்கல் மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கலை கட்டியது.

Views: - 22

0

0