அதிமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்: வரவேற்பு கொடுத்த அமைச்சர் கே.பி.அன்பழகன்

19 September 2020, 5:27 pm
Quick Share

தருமபுரி: அரூரில் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தலைமையில் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர். அப்போது புதியதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி,

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற நீங்கள் அணைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றும், மேலும் தமிழக மக்களுக்கு தமிழக அரசு செய்தும் வரும் பல்வேறு அரசின் நலத்திட்டங்களை ஒவ்வொரு பொது மக்களிடமும் எடுத்து கூறவேண்டும் என்றும் உயர் கல்வி துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 6

0

0