தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: தீ விபத்தில் இரண்டு பெண்கள் காயம்….

Author: Udhayakumar Raman
1 September 2021, 8:32 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் காயம் அடைந்தது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை ஒ.மேட்டுபட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் தீக்குச்சிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இதில் தீப்பெட்டிக்கு தேவையான தீக்குச்சிகள் காயவைக்கபட்டு அதை இயந்திரம் மூலம் சலித்து மூடைகளில் எடுத்து வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது உராய்வு காரணமாக தீக்குச்சிகளில் தீப்பற்றியது. இது குறித்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் சிக்கி சத்திரபட்டியை சேர்ந்த மாரியம்மாள் லேசான காயமைடந்த நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பலத்த தீக்காயங்களுடன் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த முருகேஸ்வரி சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான தொழிற்சாலை வளாகத்தில் காயவைக்கபட்டிருந்த தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகளை சலிக்கும் மூன்று இயந்திரங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமைடந்தன. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

Views: - 119

0

0