மாட்டுப்பொங்கல் : கால்நடைகளை அலங்கரித்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்..!

15 January 2021, 4:45 pm
Quick Share

கோவை:கோவையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் உள்ள கால்நடைகளை குளிக்க வைத்து , கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பூசை செய்து பொது மக்கள் கொண்டாடினர்.

உழவிற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாட்டுபொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் மாடுகளை வளர்ப்பவர்கள் காலையிலேயே மாடுகளை குளிப்பாட்டி , கொம்புகளுக்கு வர்ணம் தீட்டினர். பின்னர் மாடுகளுக்கு சந்தனம் பூசியதுடன் , அவற்றிக்கு புதிய மூக்கணாங்கயிறு அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.

கோவை பூசாரிபாளையத்தில் காலையிலேயே மாடுகளை குளிக்க வைத்து அவற்றை அலங்கரித்து தயார் படுத்தினர். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாடுகளை அலங்கரித்து அவற்றிக்கு சலங்கை கட்டி கோவில்களுக்கு அழைத்து செல்வதாகவும், பிறந்தநாள் கொண்டாடங்களை போல மாடுகளை இன்று தயார் செய்வதாகவும் மாடுகளை வளர்ப்போர் தெரிவித்தனர்.

இதே போன்று கோவை புறநகர் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வளர்க்கும் கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் இன்றைய தினம் மாடுகளை உழவு பணிகளுக்கு ஈடுபடுத்தாமல் அவற்றிக்கு பொங்கல், கரும்பு மற்றும் பசுந்தீவனங்களை வழங்கு மாட்டுபொங்கலை விவசாயிகளும், கால்நடை வளர்போரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Views: - 4

0

0