வாழைத்தோப்பில் பயங்கர தீ: வாழை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

4 March 2021, 7:47 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வாழைத்தோப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தர்மபுரத்தில் பாலகுரு என்பவர் சுமார் 7 ஏக்கர் உள்ள வாழை தோப்பை குத்தகைக்கு எடுத்து உள்ளார். இந்த வாழைத்தோப்பில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்தி எறிய விட்டதாக கூறப்படுகிறது . வறண்ட வானிலையின் காரணமாக வெப்பம் அதிகமாக இருப்பதால் தீயானது எளிதில் வாழைத்தோப்பு முழுவதும் பரவியதில் வாழை தோப்பு முழுவதும் தீயானது மலமலவென பரவியது . மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வாழை தோப்பிற்குள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்பு தீயணைப்பு வீரர்களால் தீயானது அணைக்கப்பட்டது. மளமளவென்று பரவிய தீயின் காரணமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சை வாழை மரங்களில் உள்ள இலைகள் மற்றும் வாழைத் தார்கள் என வாழைத்தோப்பு முழுவதும் எரிந்து தீயில் கருகி நாசமாகின.

Views: - 12

0

0