சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடைபெற்ற ஆட்டுச் சந்தை

28 September 2020, 1:48 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் 6 மாதத்திற்கு பின்பு விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டுச்சந்தை முக கவசம் அணியாமல்,சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடைபெற்றதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலையில் ஆட்டு சந்தை வாரம் ஒரு முறை திங்கட் கிழமையன்று நடை பெறுவது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தையில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள எட்டையபுரம், கமுதி, விருதுநகர் பல கிராம பகுதிகளில் இருந்து 500கும் மேற்பட்ட ஆடுகள் சந்தையில் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆடுகளை வாங்குவதற்க்கும் விற்பனை செய்வதற்க்கும் உள்ளூர் வியாபாரிகள், வெளியூர் வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 6 மாத காலம் ஆட்டுச் சந்தை நடைபெறாத நிலையில், 6 மாத காலத்திற்க்கு பின்பு ஆட்டுச் சந்தை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் இங்கு விற்கப்படும் ஆடுகளை வாங்க வரும் வியாபாரிகள் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Views: - 5

0

0