தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

2 November 2020, 4:17 pm
Quick Share

நீலகிரி: உதகையில் பொது சுகாதாரம் மற்றும் மருந்து தடுப்பு துறை சார்பில் உதகை ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கொரோனோ துவங்கிய நாளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் பணியை இடைவிடாது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகையில் 13 ஊராட்சிகளில் பணிபுரியும் சுமார் 250 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று உதகை பிரிக்ஸ் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் தூய்மைப் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ஊட்டச்சத்து மிக்க மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் உதகை ஊராட்சி மன்ற தலைவர் மாயன் , துணை சுகாதார இணை இயக்குநர் பாலுசாமி, pdo ஸ்ரீதர் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 16

0

0