மன்னார்குடியில் இரண்டு கல்லூரிகளில் படுக்கைகளுடன் கூடிய மருத்துவ வசதி: மன்னார்குடி எம்.எல். ஏ.டி.ஆர்.பி.ராஜா பேட்டி

9 May 2021, 7:12 pm
Quick Share

திருவாரூர்: கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு கல்லூரிகளில் படுக்கைகளுடன் கூடிய மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மன்னார்குடி எம்.எல். ஏ.டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பி.ராஜா போட்டியிட்டு மூன்றாவது முறையாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பெருந்தொற்றால் 15 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார்குடி தொகுதி மக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கொரோனா நோய் தொற்று குறித்தும் மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

நகராட்சி ஆணையர்,வட்டாட்சியர், கோட்டாசியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இனிவரும் நாட்களில் மன்னார்குடி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல். ஏ டி.ஆர்.பி.ராஜா, கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது பரவி வரும் சூழலில் மன்னார்குடியில் ஆரம்பநிலை அறிகுறிகளுடன் மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மன்னார்குடி மருத்துவமனையில் கொரோனா தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கும் அளவிற்கும் யாரும் சேர்க்கப்படவில்லை.

மன்னார்குடி மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை இல்லை என்றபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர் பெறுவதற்கான முன்னெச்சரிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக 150 படுகைகளுடன் கூடிய மருத்துவ வசதி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மன்னார்குடியில் உள்ள இரண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் சிகிச்சை அளிப்பதற்காக 300 படுகைகலுடன் தாயார் படுத்தப்பட்டு வருவதாகவும் எம்.எல். ஏ.டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

பொதுமக்கள் தேவையைன்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்த்து முக்காகவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுகொண்டார். டெல்டா மாவட்டங்களில் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை தங்கள் கருத்து கேட்ட பொழுது, டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் தமிழக முதலமைச்சராக வந்துள்ளார் எப்பொழுது வந்தாலும் அவரை கொள்ளலாம். மக்களுடன் இணைந்து பணியாற்றவே நான் விரும்புகிறேன் மன்னார்குடிக்கு தேவையான வசதிகளை செய்து தருவேன் என உறுதி அளித்துள்ளார் கண்டிப்பாக செய்தி தருவார் முன்மாதிரி நகரமாக மன்னார்குடியை மாற்றுவேன் என டிஆர்பி ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Views: - 44

0

0