மூன்றாவது வாரமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்: மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு

Author: Udhayakumar Raman
26 September 2021, 4:53 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்றாவது வாரமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உலகம் முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அதிக அளவில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். இதில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை காரணமாக வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதே போல் பொதுமக்களுக்கு மத்திய அரசு வைரஸ் தொற்று தடுப்பதற்கு மாநில அரசுகள் மூலம் வைரஸ் தொற்று தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு மிக தடுப்பூசி முகாமை கடந்த மூன்று வாரங்களாக நடத்திவருகின்றனர்.

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் ஊராட்சி நகர் பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 110 இடங்களில் மூன்றாவது வாரமாக மிக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் இந்நிலையில் நிலக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை திண்டுக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அன்புச்செல்வம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தடுப்பு ஊசி செலுத்தி வந்த பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வையும், அதேபோல் வைரஸ் தொற்று தடுக்கும் வண்ணம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும்  தடுப்பூசி குறித்த அவசியத்தையும் பொது மக்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பிறகு நிலக்கோட்டை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள  தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். ஆய்வின்போது நிலக்கோட்டை தலைமை மருத்துவர் டாக்டர் கணேசன், டாக்டர்கள் சேக,ர் ரியாஸ், லட்சுமி, சுசி, தங்கம், முருகேஸ்வரி உட்பட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர் .

Views: - 107

0

0