குடகனாறு ஆற்றுப்படுகையை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்: தொடர்ந்து குடகனாறு பிரச்சனைக்காக பாமக போராடும் என உறுதி

Author: Udayaraman
24 July 2021, 5:31 pm
Quick Share

திண்டுக்கல்: சுமார் பத்து வருடங்களாக முடக்கப்பட்டுள்ள குடகனாறு ஆற்றுப்படுகையை பொதுமக்களுடன் சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உருவாகி கன்னிமார் கோயில் வழியாக காலம் காலமாக தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. ஆத்தூரில் இருந்து தண்ணீர் குடகனாறு ஆற்று படுகை வழியாக சுமார் 110 கிலோ மீட்டர் கரூர் வரை செல்கிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையால் கன்னிமார் ஓடை பகுதியில் இருந்து ஆத்தூர் அணைக்கு தண்ணீர் வரும் வழியை மரித்து தடுப்பணை கட்டியது. இதன் காரணமாக குடகனாறு ஆற்றுப்படுகையில் தண்ணீர் வராததால் ஆற்றுப்படுகை நம்பியுள்ள வீரக்கல், அனுமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர், திண்டுக்கல், வேடசந்தூர் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயம் இன்றி வறண்டு போயின.

இந்நிலையில் குடகனாறு மீட்புக்குழு என்று விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் செய்து தற்போது வரை வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடத்தில் 15 நாட்கள் மட்டுமே குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் தண்ணீர் திறக்கப் படாமல் அடைக்கப்பட்டது இதனால் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் பல்வேறு கட்சியினரையும் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞர் அணி அன்புமணி ராமதாஸ் ஆணைக் கிடங்கு சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேலத்தை சேர்ந்த அருள் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா ஆகியோர் இன்று நேரடியாக ஆத்தூர் அணை மற்றும் கன்னிமார் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் பார்வையிட்டனர்.

அவர்களிடம் பொதுமக்கள் தங்களது பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று கண்ணீர் மல்க கூறினர். தடுப்பணை கட்டியுள்ளதால் எங்களது வாழ்வதாரம் தற்போது 10 வருடங்களாக அழிந்துவிட்டது என்று கூறினர். மேலும் சட்டமன்றத்திலும் முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கை வைக்க வேண்டும், எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் குடகனாறை நம்பி 300 கிராமங்கள் உள்ளன என்று பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்தனர். செய்தியாளர்களை சந்தித்த சேலம் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கூறும் பொழுது, குடகனாறு ஆற்றுப் படுகைகளை பார்வையிட்டேன் 300க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் குடகனாறு ஆற்றுப்படுகையை நம்பி உள்ளன. கன்னிமார் கோயில் பகுதியில் தடுப்பணை கட்டி உள்ளதால் 300 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இப்பகுதி திமுக அமைச்சர் தடுப்பணை கட்டியது எனக்கு தெரியாது என்று சொல்வது நியாயமல்ல இருந்தாலும், 16 கிராம விவசாயிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் விடும் நிலையை மாற்றி தொடர்ந்து 300 கிராம விவசாயிகளுக்காக தண்ணீர் கிடைக்க தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மேலும் குடகனாறு பிரச்சினை குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரை சந்தித்து குடகனாறு பிரச்சினை பற்றி கண்டிப்பாக கூறுவோம் தமிழக முதல்வர் பொதுமக்களுக்காக ஆட்சி என கூறி வருகிறார். அதேபோல் பொது மக்கள் தேவைகளை உடனடியாக செய்து வருகிறார். ஆகவே நாங்கள் கொண்டு செல்லும் குடகனாறு பிரச்சனை உடனடியா தீர்த்து வைப்பார். அதுவரை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குடகனாறு பிரச்சனைக்காக போராடும் என தெரிவித்தார்.

Views: - 105

0

0