கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்

28 October 2020, 6:53 pm
Quick Share

விருதுநகர்: இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் ,செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் , ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் புத்தாடை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் PACR அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனை என இரண்டு மருத்துவமனைகள் உள்ளன. இதில் மருத்துவர் ,செவிலியர், உட்பட 215 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கொரோனா காலத்தில் இராஜபாளையம் பகுதி மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து பணியாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Views: - 11

0

0