அரசு மதுபானகடை நுழைவாயிலில் முன்பாக கூலித் தொழிலாளி உடல் மீட்பு

13 September 2020, 1:22 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் அரசு மதுபானகடை நுழைவாயிலில் முன்பாக மர்மான முறையில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை நுழைவாயிலில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிபூண்டி போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் ஈகுவார்பாளையம் குமார நாயக்கன் பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி முனிரத்தினம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு
அவர் மது போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0