முன்விரோதத்தால் கூலித் தொழிலாளி கொலை: 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

8 February 2021, 8:42 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்விரோதத்தால் கூலித் தொழிலாளி கொலை செய்த 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொள்ளுர்பட்டி தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (55) . அதே பகுதிைய சேர்ந்த வெள்ளைச்சாமி மற்றும் அண்ணாமலை என்ற மகாலிங்கம் இவர்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். சிவலிங்கம் அவரது வீட்டில் மனைவியோடு இருந்தபோது அண்ணாமலை என்ற மகாலிங்கம் சிவலிங்கத்தை வெளியே அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிவலிங்கம் வீட்டிலிருந்து வெளியே வந்த போது அங்கிருந்த வெள்ளைச்சாமி என்பவர் ஓடிவந்து மறைத்திருந்த கத்தியை வைத்து தலையில் தாக்கி பின்னர் மார்பு பகுதியில் குத்தி விட்டு ஓடிவிட்டார். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து சிவலிங்கம் மகன் பார்த்தபோது சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் உறவினர்கள் துணையோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் பரிசோதனை செய்தபோது சிவலிங்கம் இறந்துவிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவலிங்கத்தின் மனைவி புஷ்பம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், நகர் போலீசார் சிவலிங்கத்தை கொலை செய்த வெள்ளைச்சாமி மற்றும் அண்ணாமலை என்ற மகாலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் கொள்ளு ர் பட்டி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது முன்விரோதத்தில் கொலை நடைபெற்றதா ? அல்லது என்ன காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றது என்பது குறித்து நகர் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0