15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி….

Author: kavin kumar
7 August 2021, 1:29 pm
Quick Share

சென்னை: அயனாவரம் அருகே 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சலீம்.இவர் ஐ.சி .எப் வடக்கு திருமலை நகர் பகுதியில் புதியதாக கட்டி வரும் கட்டிடத்துக்கு தினமும் பெயிண்ட் அடித்து வருகிறார். இந்நிலையில் 15 அடி உயரத்தில் சலீம் பெயிண்ட் அடித்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராத வேளையில் சலீம் திடீர் என்று கால் தவறி 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக ஐ.சி.எப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 130

0

0