தேங்கி நிற்கும் மழை நீரில் காகித கப்பல் விட்டு விளையாடும் வியாபாரிகள்
Author: kavin kumar28 October 2021, 11:47 pm
கோவை: கோவையில் தேங்கி நிற்கும் மழை நீரில் காகிதகப்பல் விட்டு காய்கறி வியாபாரிகள் விளையாடும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவையில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவையில் பல்வேறு இடங்கள் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.இதனால் பாதைசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளன நிலையில் மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களை அவ்வப்போது சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் காய்காறி மார்கெட்டில் மழை நீர் தேங்கி காணப்படும் நிலையில் அதில் வியாபாரிகள் காகித கப்பல் விட்டு விளையாடும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
0
0