கடைகளை இடமாற்றம் செய்வதில் குளறுபடி: வியாபாரிகள் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம்

Author: kavin kumar
12 October 2021, 2:54 pm
Quick Share

மதுரை: மதுரை புதுமண்டபத்தில் உள்ள கடைகளை இடமாற்றம் செய்வதில் குளறுபடி என வியாபாரிகள் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சந்நிதி முன் அமைத்துள்ள புதுமண்டபத்தை கோவில் நிர்வாகம், வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வியாபார ஸ்தலம் போலவே செயல்படத் இருந்து வருகிறது. தற்போது மண்டபத்தின் உள்ளேயும், சுற்றிலும் வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளனர். இங்கு அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தேவையான ஆடைகள், பொருட்கள், பாரம்பரிய பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் புதுமண்டபத்துக்கு சென்று பொருட்களை வாங்கிச் செல்வர். இந்த புதுமண்டபத்தின் சிற்பங்களையும், அதன் பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் இங்குள்ள வியாபாரிகளை மாற்று இடத்துக்கு இடமாற்றம் செய்வதற்காக, மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் புதிதாக குன்னத்தூர் சத்திரக் கட்டிடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடத்தில் புதுமண்டபத்தில் கடைகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கி தருவதாக மாநகராட்சி உறுதி அளித்திருந்தது. குறிப்பாக புதுமண்டபத்தில் 300 கடைகள் உள்ள நிலையில் குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் மொத்தமாக 195 கடைகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது. குன்னத்தூர் சத்திரத்தில் உள்ள கடைகளை புதுமண்டபம் வியாபாரிகளுக்கு ஒதுக்க டெண்டர் விட்டு வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கான டெண்டர் முறை இன்று மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து அறநிலையதுறை மற்றும் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதுமண்டப கடைக்காரர்கள் தொடர்ந்து அதிகாரிகளிடத்தில் 300 கடைக்கு பதில் 195 கடைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைத்து கடை நடத்துபவர்களுக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.,

Views: - 217

0

0