கடன் தவணையை கட்டாய வசூல் செய்ய சென்ற மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள்: விளக்கம் கேட்டபோது மிரட்டல் தொனியில் பேசிய பகுதி மேலாளர்

Author: Udayaraman
13 October 2020, 11:03 pm
Quick Share

கொரோனா பெருந்தொற்று காரணமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்த நெருக்கடி கொடுக்க கூடாது எனவும் இதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனைத்து வட்டாச்சியர்களுக்கும் நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் கோவையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடன் பெற்றவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கோவை சேர்ந்த சியோன் மைக்ரோ கிரெடிட் பவுண்டேசன் என்ற நிறுவனத்தில் இருந்து லாலி ரோடு பகுதியில் இருந்து ஒன்பது பேர் கொண்ட குழுவினர் தலா 15,000 ரூபாய் கடனாக பெற்று உள்ளனர்.இந்த குழுவிற்கு வத்சலா என்பவர் தலைவராக உள்ளார்.

இன்று அவரது வீட்டிற்கு சென்ற மைக்ரோ பைனான்ஸ் பகுதி மேலாளர் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பணத்தை கட்ட சொல்லி நிர்பந்தம் செய்ததாகவும் ஓரிரு நாள் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் கால அவகாசம் அளிக்காமல் மிரட்டுவதாக தெரிவித்தார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் மாதம் இருமுறை என 12 மாதம் பணம் செலுத்த வேண்டிய நிலையில் இதுவரை ஆறு மாதங்கள் பணத்தை செலுத்தி உள்ளதாகவும்,

கொரோனா தொற்று காரணமாக பணம் செலுத்த முடியாத சூழலிலும் அவ்வப்போது பணம் கட்டியதாகவும் இந்த மாத தவணைக்கு கால அவகாசம் கேட்டு இருந்த நிலையில் வீடு தேடி ஊழியர்கள் வந்து பணத்தை கட்ட சொல்லி மிரட்டுவதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சியோன் மைக்ரோ பைனான்ஸ் பகுதி மேலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது வேறொரு உறுப்பினர் குழு தலைவர் வத்சலாவிடம் கொடுத்து இருந்த பணத்தை கேட்க சென்றதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மீண்டும் தொடர்பு கொண்ட அவர் அதிகாரமாக மிரட்டும் தொனியில் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் பேசுவது அனைத்தும் பதிவு செய்யபடுவதாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டு சில தளர்வுகளுடன் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் நிலை உயர போராடி வரும் நிலையில் இம்மாதிரியான செயல்கள் வேதனை அளிப்பதாக உள்ளது.

Views: - 37

0

0