ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

9 May 2021, 8:33 pm
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற அந்த வேன் விபத்தில் சிக்கியதால் சாலையில் சிலிண்டர்கள் சிதறிக்கிடதன.மினி வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் செல்லப்பன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோயில் பகுதியில் இருந்து 63 சிலிண்டர்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசூர் என்ற இடத்தில், மினி வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென, இருசக்கர வாகனம் குறுக்கே வந்தது. அதில் மோதாமல் இருக்க வேனின் ஓட்டுநர் வாகனத்தை திருப்பிய போது விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் இருந்த, சிலிண்டர்கள் சாலையில் சிதறிக் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 29

0

0