கொரோனா நோயாளிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர்
18 September 2020, 8:51 pmபுதுச்சேரி: புதுச்சேரி அரசு கொரோனா மருத்துவமனைக்கு புதிதாக வாங்கப்பட்ட கழிவறையை தூரத்தில் இருந்து சுத்தம் செய்யும் இயந்திரத்தை சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இயக்கி காட்டினார்.
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு கொரோனா மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும், கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடத்தில் சிகிச்சைக்கான மருந்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனையில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்து அங்கு உள்ள கழிவறைகளை சுத்தப்படுத்த புதிதாக வாங்கியுள்ள இயந்திரம் மூலம் கழிவறையை சுத்தப்படுத்தி அங்குள்ள ஊழியர்களுக்கு கழிவறையை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார். மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இதுபோன்று நவீன கருவிகளை வாங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.