ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் உறிஞ்சும் இடத்தை அமைச்சர் ஆய்வு

9 July 2021, 5:31 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் உறிஞ்சும் இடத்தை தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

தருமபுரியில், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் வழங்குவது குறித்து தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்ய தருமபுரிக்கு வந்தார். அவர் முதலில், அதகப்பாடி மற்றும் பென்னாகரத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் சேமித்து வைக்கும் மேல்நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார். பின்னர் ஒகேனக்கல்லில், கூட்டுகுடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு அங்கு வரக்கூடிய நீரை எவ்வாறு சுத்திகரிக்கபடுகிறது என்றும், வரகூடியநீரில் எத்தனை சதவீதம் ப்ளோரைடு உள்ளது எனகேட்டறிந்தார். வரக்கூடியநீரை முழுமமையாக. சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறினார்.

பின்னர் காவிரியிலிருந்து வரகூடிய நீரையேற்றும் தலைமை நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஒருநாளைக்கு எத்தனை கனஅடிநீர் வருகிறது என்றும் அது அப்படியே சுத்திகரிக்க அனுப்பப்படுகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Views: - 118

0

0