வயலில் இறங்கி நாற்று நட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் காமராஜ்…

Author: Udhayakumar Raman
29 March 2021, 4:53 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார் இன்று வலங்கைமான் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது வயலில் இறங்கி பெண்களுடன் சேர்ந்து நடவு நட்டு வாக்கு சேகரித்தார்..

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சன்னாநல்லூர், தூத்துக்குடி, நல்லமாங்குடி, நன்னிலம், மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வலங்கைமான் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது அமைச்சர் காமராஜ் வயலில் இறங்கி பெண்களுடன் சேர்ந்து நடவு நட்டு வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Views: - 50

0

0