குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு

Author: Udhayakumar Raman
6 August 2021, 1:54 pm
Quick Share

திருச்சி: உறையூர் காவல் நிலையம் அருகே குடிநீர்த் தொட்டி வளாகத்தில் 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டத்தில் தரைமட்டத் தொட்டி கட்டுதல், பெரியார் நகர், கம்பரசம்பேட்டை நீர் சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீர் சுற்றுவட்ட குழாய்கள் அமைத்தல், மோட்டார் பம்புசெட் டீசல் ஜெனரேட்டர் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நடை பாலம் அமைக்கும் பணி என ₹ 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பணிகளை திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே குடிநீர்த் தொட்டி வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்திகளை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதாவுக்கு கட்சிக்கும் இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினஸில் கை வைப்போம் என கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்வி பதில் அளித்த கே என் நேரு, நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் அண்ணாமலை எல்லாம் பயப்பட தேவை இல்லை மேலும் தற்போதைய தலைவராகி இருப்பதால் தன்னை காட்டிக் கொள்வதற்காக செயல்படுகிறார் என தெரிவித்தார்.

Views: - 117

0

0